நாம் பொதுவாக நம் சமையலறையில் எல்பிஜி எரிவாயு பர்னர் எரிக்க தீ தூண்டி கருவி (Lighter) என்ற ஒரு இலகுவான கருவி உபயோகிறோம். தீ தூண்டி கருவி பின் பக்கம் ஒரு பொத்தானை தீப்பொறி உருவாக்க பெருவிரலால் அழுத்தும் போது தீப்பொறி உருவாகும் , அது எப்படி ?
தீ தூண்டி கருவி என்பது இப்போது எந்த சமையலறையிலும் மிக முக்கியமான கருவியாக உள்ளது. அது மின்சார அழுத்த விளைவு (Piezoelectric effect) என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறது. இந்த தீ துண்டி கருவியில் குவார்ட்ஸ்(Quartz) படிகக்கல்(Crystals) உள்ளது. இது இயல்பாகவே மிகவும் நல்ல முறையில் மின்சார அழுத்த விளைவு உற்பத்தி செய்ய வல்லது. எனவே நாம் தீ தூண்டி கருவியின் பின்புறம் உள்ள பொத்தானை அழுத்தி விசை பயன்படுத்தும் போது குவார்ட்ஸ் படிகம் அங்கு ஒரு மின்னழுத்தை அதன் குறுக்கு திசையில் முழுவதும் உருவாகிறது. இது இங்கு ஒரு தீப்பொறி உருவாகிறது மேலும் இதனை கொண்டு எளிதில் எரியக்கூடிய எல்பிஜி என்ற வாயுவை மிகவும் எளிதில் பற்றக்கூடியதாக செய்துவிடுகிறது